Thursday, December 18, 2008

சூப்பர்மேன் பார்த்து இருக்கீங்களா!!!!

நண்பர்களே!!!

சூப்பர்மேன் பார்த்து இருக்கீங்களா!!!!

இங்க பாருங்க சூப்பர்மேனுக்கும் சூப்பர்மேன் ஒருத்தர் ஒரு கட்டிடத்தில் இருந்து எப்படி குதிக்குறாரு பாருங்க...

வீடியோவை முழுவதும் பாருங்க....

நன்றி!!!!

Wednesday, December 17, 2008

சோம்பேறி பையனும்-புத்திசாலி நாயும்

இந்த வீடியோவ பாருங்க.. சோம்பேறியா இருக்குற தனது எஜமானனுடன் இனிமேல் இருக்க முடியாது. என்று கோபத்தில் அது வீட்டை விட்டு வெளியேறுகிறது....

ஐந்து அறிவு ஜீவன் என்றாலும்.. நாயின் பாசத்திற்கு ஈடு இணை இல்லை..

நன்றி!!!!

தனி மனிதனின் உடலில் ஆய்தகிடங்கு

இந்த வீடியோல பாருங்க நண்பர்களே!! ஒரு மனிதனின் உடம்பில் ஒரு இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை வச்சுகிட்டு திரியுறாரு....

பெரிய சண்டை எதாவது வந்தா இவரு ஒருதர அனுப்புனா போதும்....

இந்த வீடியோவப் பாருங்க ஆச்சரிய படுவீங்கனு நினைக்குறேன்..

நன்றி!!!!

Monday, December 15, 2008

இப்படி எல்லாம் நடக்குமா!!!!!!!!!!!

ஆப்பரிக்கவுல சலூன் பக்கம் போகாதீங்க.... சந்தேகமா!!! இங்க பாருங்க ஒருத்தருக்கு என்ன நடக்குதுனு...

இது எல்லாம் கெஞ்சம் ஒவர் தான்... டென்சன் தானே வரும்.. ஆனா நமக்கு பார்த்தா காமடி தான் வருது...

நன்றி!!!!

சாகசங்கள் ஆயிரம்.. பிரமிக்க வைப்பது தான் சாகசம்

இவங்கள பாருங்க எவ்வளவு அழகா பிரமிக்க வைக்குறாங்கனு...

சாகசங்கள் ஆயிரம்.. பிரமிக்க வைப்பது தான் சாகசம்

கையிலே கலை வண்ணம் கண்டேன்.. என்ற பாடலுக்கு ஏற்ப .. கையிலே பாருங்க அவரு எவ்வளவு படம் காட்டுறாருனு....

பிரமாதமான இவரது ஆற்றல்... நம்பவே முடியல.. இது உண்மை தான கெஞ்சம் வீடியோ பார்த்துச் சொல்லுங்க..

இங்குள்ள வீடியோக்கள் உங்கள் மனதில் சந்தேசத்தையும் ஆச்சரியத்தையும் தந்து இருக்கும்... வீடியோ பார்த்தாச்சா.. காசெல்லாம் வேணாம் வேட் போடுங்க போதும்....

நன்றி!!!!!!

தவளை தன் வாயால் கெடும் பழமொழி இப்படி தான்

இங்கு ஒரு தவளை தன் நாவால் தன் வாழ்வைத் தெலைத்து விட்டது..

வீடியோவைப் பாருங்க...

நன்றி!!!

அலாரம் ரிப்பேர் ஆச்சு

நண்பர்களே வணக்கம்..

இங்க ஒருத்தருக்கு அலாரம் ரிப்பேர் ஆச்சு அதுனால அவருக்கு ஏற்பட்ட

விளைவு, காமடிக்கு தான் யாரும் சிரியசா எடுத்துக்க வேணாம் .

நன்றி

Friday, October 31, 2008

கோபத்தைக் கொல்ல வழிகள்..!

1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்...

2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ? வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.. .

3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும். . .

4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும். . .

5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்..

6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். . .

7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.. .

8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.. .

9. பேசுங்கள் உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.