Thursday, March 8, 2007

தானே முளைத்த தமிழ் விதையது

குழைந்து குழைந்து
கசடு கலந்த காடது
ச‌க‌தியில் திரண்டு
க‌ல‌ந்த‌ மொழிக்காடது
எம்மொழி விதையும் ப‌ட்டு வ‌ள‌ரும்
கருகிச்சாகும்‍‍அக்காடு
என் திருநாடு த‌மிழ்நாடது

அக்காட்டில் தானே
முளைக்குது தமிழ் என்னும் விதையது
ம‌ண்னை துழைக்குது
முட்டி மோதி எகுறுது
அசையா மரமாய் நிக்குது.( தமிழ் மரமாய் நிக்குது )
விண்னை தேடுது.

ஓங்கி வ‌ள‌ருது,
காடெங்கும் ப‌ர‌வுது
த‌மிழ் ம‌ண‌ம் ம‌ண‌க்குது.
த‌மிழ் க‌னிக் கொடுக்குது
அக்க‌னி இனிக்குது
அது தானே முளைத்த தமிழ் விதையது
எந்த‌ன் மொழிய‌து.
த‌மிழ் மொழியாய் இனிக்குது.

0 comments: