Thursday, March 8, 2007

ந‌ட்பு

என் அன்பை அடகு வைக்கிறேன்.
உன் மனதை கடனாக கொடுவாழ்கை முழுதும் வட்டி கட்டுகிறேன்
நட்பாக நானிருந்து.

என் நினைவாக‌ உன்னிட‌ம் ஒன்றும் இல்லை.
ஆனால் என்னிட‌ம்உன் நினைவை த‌விர‌ வேறொன்றும் இல்லை.

ஒரு நொடி சிரித்துமறு நொடி அழுகின்ற‌ ஆன‌ந்த‌ம் காத‌ல்!!!!.
ஒரு நொடி சிரித்துமறு நொடி தோழ் கொடுக்கிற‌ ஆன‌ந்த‌ம் ந‌ட்பு!!!

நீ விரும்பும் உயிருக்கு உன் அன்பு புரியாது!!
ஆனால் உன்னை விரும்பும் உயிருக்கு
உன்னை த‌விர‌ வேறொன்றும் தெரியாது.
எனனை மறந்து நான் தூங்கின தூக்கம் கருவறையில் தான்
உன்னை மறந்து நான் தூங்கும் தூக்கம் என் கல்லறையில் தான்

உனது கண்கள் கலங்கிய பின்பு தான்
எனது கண்களில் தூசி விழுந்ததை நான் உணர்ந்தேன்!!!

பொருமை

தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்..
அது ப‌னிக்க‌ட்டியாகும் வ‌ரை பொருத்து இருந்தால்....‍



வைர‌முத்துவின் வ‌ரிக‌ளில்

தானே முளைத்த தமிழ் விதையது

குழைந்து குழைந்து
கசடு கலந்த காடது
ச‌க‌தியில் திரண்டு
க‌ல‌ந்த‌ மொழிக்காடது
எம்மொழி விதையும் ப‌ட்டு வ‌ள‌ரும்
கருகிச்சாகும்‍‍அக்காடு
என் திருநாடு த‌மிழ்நாடது

அக்காட்டில் தானே
முளைக்குது தமிழ் என்னும் விதையது
ம‌ண்னை துழைக்குது
முட்டி மோதி எகுறுது
அசையா மரமாய் நிக்குது.( தமிழ் மரமாய் நிக்குது )
விண்னை தேடுது.

ஓங்கி வ‌ள‌ருது,
காடெங்கும் ப‌ர‌வுது
த‌மிழ் ம‌ண‌ம் ம‌ண‌க்குது.
த‌மிழ் க‌னிக் கொடுக்குது
அக்க‌னி இனிக்குது
அது தானே முளைத்த தமிழ் விதையது
எந்த‌ன் மொழிய‌து.
த‌மிழ் மொழியாய் இனிக்குது.

இறைவன்

நீ இன்பத்தில் இருக்கும் போது இறைவனை நினைத்தால்
நீ துன்பத்தில் இருக்கும் போது இறைவன் உன்னை நினைப்பான்

-


சுவாமி விவேகானந்தர்

எந்த‌ன் க‌ற்ப‌னை

எழுதியதை எல்லாம் எரித்துவிடுவேன்.
என்னவள் பார்க்கும் முன்னே
ஏன்னென்றால் அவளின் மணம் இழகியதே!

என்னுள் எரியும் நெருப்பு
அவளின் நெஞ்ச‌த்தை நெருடிவிட்டால்
நெருங்க‌ முடியாதே...
நான் என்ன‌ செய்வேன்..

அவ‌ள் என்னை காத‌லிக்க‌ தொட‌ங்கி விட்டால்
க‌ளைத்துவிடுமேஎந்த‌ன் க‌ற்ப‌னை!!

மரணம்

என்னுயிரோஉன்னிடத்தில்
உன்னுயிரோஎன்னிடத்தில்
மரணம் என்ன செய்யும்?

என்னை கவர்ந்த நட்பு கவிதை

மழலைப் பருவத்தில்
பார்த்து வியக்க ஒரு நட்பு...
குழந்தைப் பருவத்தில்
ஓடி விளையாடஒரு நட்பு...
காளைப் பருவத்தில்
ஊர் சுற்ற ஒரு நட்பு...
வாலிபப் பருவத்தில்
பேசி ரசிக்கஒரு நட்பு...
முதிர்ந்த பின்
அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு...
நட்புகள் ஆயிரம் இருந்தும்
நட்பின் தேவை குறையவில்லை...
தேவையின் போது
தோள்களில் சாய நட்பு வேண்டும்...
துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நட்பு வேண்டும்...
மகிழ்ச்சியின் போது
மனம் மகிழநட்பு வேண்டும்...
நானாக நானிருக்கநட்பே...
நீ எனக்கு நட்பாக வேண்டும்..