Friday, October 31, 2008

கோபத்தைக் கொல்ல வழிகள்..!

1. கோபம் வரும்போது நன்றாக மூச்சை இழுத்து விடவேண்டும். நுரையீரலின் தரை தொடும் பிராணவாயு உடலுக்கு சற்று இறுக்கம் தளர்க்கும். பத்து எண்கள் வரை மிகவும் மெதுவாக எண்ணிக் கொண்டே ஆழமாக மூச்சை இழுத்து விடுவது மிகவும் பயனளிக்கும்...

2. நம் இடத்தில் அடுத்த நபர் இருந்தாலோ, அல்லது அந்த நபரின் இடத்தில் நாம் இருந்தாலோ இதே நிலமை வந்திருக்குமா ? வருதல் நியாயம் தானா என கண்களை மூடி சிறிது நேரம் யோசிக்கலாம்.. .

3. இந்த கோபத்தைத் தூண்டிய செயல் பத்து ஆண்டுகள் கழிந்த பின்னும் கவனத்தில் கொள்ளத் தக்கதா என சிந்தியுங்கள். நாம் வேகமாய் வாகனம் ஓட்டும்போது ஒருவர் குறுக்கே ஓடுவது நமது கோபத்தைக் கிளறியிருந்தால் அது கோபத்துக்குத் தகுதியானதில்லை என்பதை விளங்கிக் கொள்ள இது பயன்படும். . .

4. இந்த கோபத்துக்கான காரணி நமக்கு ஏற்படுத்தும் பாதகங்களைச் சிந்தியுங்கள். வரிசையில் ஒருவர் இடையே புகுந்து விட்டால் ஏற்படும் ஐந்து நிமிட இழப்பு வாழ்க்கையில் எத்தகைய பாதிப்பையும் பெரும்பாலும் ஏற்படுத்துவதில்லை என்பதை உணர இது வழி செய்யும். . .

5. இதே போன்ற ஒரு பிழையை நீங்கள் செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு அப்படியெனில் அந்த நிகழ்வுக்காக நீங்கள் உங்கள் மீதே கோபப்பட்டீர்களா என சிந்தியுங்கள்..

6. இந்த செயல் உங்களுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்பட்டதா என யோசியுங்கள். பெரும்பாலும் இல்லை என்றே பதில் வரும். இல்லை என பதில் வந்தால் அதை விட்டு விடுங்கள். அதுகுறித்து கோபமடைந்து உங்கள் பொன்னான நேரத்தையும், உடல் நலத்தையும் கெடுத்துக் கொள்ளாதீர்கள். . .

7. நல்ல ஒரு உன்னதமான சூழலை கண்களை மூடி கற்பனை செய்யுங்கள். உங்கள் அருமை மகள் உங்களை ஓடி வந்து கட்டியணைக்கலாம், உங்களுக்கு உயரிய விருது ஒன்று வழங்கப்படலாம், காதலியுடன் காலார நடக்கலாம் இப்படி ஏதாவது. அல்லது கடந்த காலத்தில் உங்கள் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு. இது சூழலின் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும்.. .

8. அந்த இடத்தை விட்டு நாகரீகமாக கடந்து சென்று விடுங்கள். சூழல் மாறும் போது சிந்தனைகள் மாறும். நாம் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொரு வினாடியும் நமது கோபத்தை மட்டுப்படுத்தும். நாம் கோபமாய் செய்யும் செயல் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க நமக்கு இந்த இடைவெளி கற்றுத் தரும்.. .

9. பேசுங்கள் உறவுகளுக்கு இடையேயான தவறான புரிதல்களை வெளிப்படையான உரையாடல் சரிசெய்யும்.

1 comments:

Unknown said...

Good things to follow. Keep it up